ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர்சிகிச்சைக்காக ஜெர்மனி சென்று சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். செரிமான பிரச்னை காரணமாக உயர்சிகிச்சைக்கு ஜெர்மனி சென்று சென்னை திரும்பியுள்ள ராஜாத்தி அம்மாளை சிஐடி காலனியில்…

உயர்சிகிச்சைக்காக ஜெர்மனி சென்று சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

செரிமான பிரச்னை காரணமாக உயர்சிகிச்சைக்கு ஜெர்மனி சென்று சென்னை திரும்பியுள்ள ராஜாத்தி அம்மாளை சிஐடி காலனியில் அமைந்துள்ள கனிமொழி இல்லத்திற்கு நேரில் வந்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமான பிரச்னை காரணமாக அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஜெர்மனிக்கு உயர் சிகிச்சைக்காக கனிமொழி ராஜாத்தி அம்மாளை அழைத்து சென்றிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பிய அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.