அரசு மருத்துவமனையில் புதிய ஆம்புலன்ஸ் சேவை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல நிலையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை வலுப்படுத்தும் விதமாக 75 மேம்படுத்தப்பட்ட…

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல நிலையத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை வலுப்படுத்தும் விதமாக 75 மேம்படுத்தப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையையும், மனநல சிகிச்சையில் குணம் அடைந்தவர்களுக்கான இடைநிலை பராமரிப்பு நிலையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் ’நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கடந்த பத்து ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், கடந்த ஒன்றரை ஆண்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை மேயர் பிரியா, மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.