ரூ.23.72 கோடி மதிப்பிலான காவல்துறையின் புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் 23 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் 25 நிறுவனங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதியினை அவர் வழங்கினார். இதனையடுத்து தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி மென்பொருள் தளத்தினையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.