கிறிஸ்துமஸ் பண்டிகை | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.  இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  இதனைத் தொடர்ந்து…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை” என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கியவர் புனிதர் இயேசுநாதர்;

இதையும் படியுங்கள்: ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பக்தர்களின் வருகை அதிகரிப்பு – முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை!

அவர் பிறந்த திருநாளில் அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1738806551018979726

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.