இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அவர்க்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மு.வீரபாண்டியனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்”
என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் கூட்டணில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







