நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்ற சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பதவியேற்ற சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக போராட்டத்தில் அந்நாட்டு இளைஞர்கள் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாகியதை அடுத்து ஆளும் ஆட்சியாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தீக்கிரையாகின.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நேபாள அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, நாட்டின் ஜனாதிபதி, ராணுவம் மற்றும் போராட்டக்குழுவினர் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேபாளத்தின் பிரதமராக சுசீலா கார்கி நேற்று பதவியேற்றார்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி சுசீலா கார்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள வாழ்த்தில்,

“நேபாளத்தில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இன்று பதவியேற்றுள்ள திருமதி சுஷிலாக்கு, 1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு அவர் வழி வகுப்பார் என்று நான் நம்புகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.