சிங்கப்பூரில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கான்சாய் விமான நிலையத்தில் இந்திய தூதர் நிகிலேஷ் கிரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து, வரும் மே 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகா நகரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.