சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சந்தித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (டிச.21) உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடியின் வசம் இருந்த உயர் கல்வித் துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிச.22) சென்னை ஆழ்வார்பேட்டையில், சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்தித்தார்.







