பல்கலை.யில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு!

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம்,  செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச்…

பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஐரோப்பாவின் பிராக்கில் (Prague) உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த சம்பவம்,  செக் குடியரசில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு இது என கூறப்படுகிறது. சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறைக் கட்டிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | புன்னைக்காயல் கிராமம் மீள்வது எப்போது? | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

இந்த சம்பவம் எந்த தீவிரவாத நோக்கத்துடனும் அமைப்புடனும் தொடர்புடையது இல்லை என செக் உள்துறை அமைச்சர் விட் ரகுசான் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் போலீஸார் ஆய்வு நடத்தி வருவதாகவும், கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு , தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.