அதிமுகவை அழிப்பதில் தான் சர்வாதிகாரியாக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமச்சந்திரா ஆதித்னாரின் 88வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆயிரம்விளக்கு பகுதியில் இருக்கும் மாலை முரசு அலுவலகத்தில் வைத்திருக்கும் ராமச்சந்திர ஆதித்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் இராமச்சந்திர ஆதித்தனார். எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. எத்தகைய சாதனைகளை செய்தோம் என்பதே முக்கியம். வாழ்ந்து மறைந்த தெருவிற்கு கூட இவர் பெயரை சூட்டியது அதிமுக அரசு.
100 சதவீத போதைப் பொருள் தடுப்பதில் திமுக அரசு தவறவிட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று மட்டுமே முதல்வர் கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் தவறு செய்யும் போதும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் கட்சிக்காரர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டு தான் வருகிறார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சர்வாதிகார ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக வை அழிப்பதில் தான் சர்வாதிகாரியாக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
பருவமழை வரவிருக்கும் நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. குளங்கள் ஏரிகள் தூர்வாராமல் தற்போது மழை பெய்தால் தண்ணீர்
முழுமையாக கடலுக்கு சேர்க்கிறது. இதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் முழுமையாக குடும்ப ஆட்சி தான் இருந்தது. உதயநிதிக்கு புகழ் பாடும் துறையாக தான் தற்போது கல்வி துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால் மாணவர்களுக்கும், பள்ளி கல்வித்துறைக்கு எந்த ஒரு கட்டமைப்புகள் செய்யாமல் இருக்கிறார். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு தொழிலை செய்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சட்டம் கொண்டு வந்து அதிமுக அரசு. இருப்பினும் தற்போது நாங்கள் பாதுகாப்பாளர்கள் என்று மீண்டும் நில அதிரப்பறிப்பு செய்து வருகின்றனர்.
வருமுன் காப்போர் அறிவாளி வந்தபின் காப்பாற்றுவது கோமாளி. தற்போது பருவமழையில் பெய்த பிறகு போட்டோஷூட் எடுப்பதற்கும் விளம்பரம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்கள். போதைப் பொருள் கடத்துபவர்கள் பயன்படுத்துவர்கள் என அனைவரையும் இரும்பு கரம் கொண்டு அம்மா அடக்கினார். அதுமட்டுமில்லாமல் எங்கள் ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. தற்போது காவல்துறையை முழுமையாக செயல்படவில்லை ஏவல் துறையாக அடக்கி வைத்துள்ளார்கள்.
ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் இயங்குவார் அதை மீறி இயங்க முடியாது.
அவர்கள் அரசியல் பேசியது என்பது எதுவாகவே இருக்கலாம். அமமுக பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அ.ம.மு.க பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஓபிஎஸ்ஐ அழைப்பார்கள் என நினைக்கிறேன். ஓபிஎஸ் அவர்கள் சசிகலா டிடிவி என்று அப்படியே சென்று விடட்டும் அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.







