தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில்…

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதியில் 18 வயது நிறைவு பெற்றவர்களை வாக்காளராக சேர்த்திடும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதனையடுத்து வரும் 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.. இந்த பணிகள் குறித்தும், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று பிற்பகலில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம பிற்பகல் 3 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply