செஸ் ஒலிம்பியாட்; தங்கம் யாருக்கு? இன்று முக்கிய பலப்பரீட்சை!

 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான…

 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த மூன்று அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

ஓபன் பிரிவில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி இன்று 8-ஆம் இடத்தில் உள்ள ஈரானுடன் மோதுகிறது. ஓபன் பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய பி அணி இன்று முதல் இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

அண்மைச் செய்தி: ‘சென்னை மடுவின்கரையில் 3.27 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் உந்து சக்தி நிலையம்’

மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி மூன்றாம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியில் இந்த மூன்று அணிகளுமே வெற்றியைப் பதிவு செய்தால் தங்கப்பதக்கத்திற்கான ரேசில் இருப்பார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.