பொதுவாழ்வில் பெண்கள் – 145வது இடத்தில் பாகிஸ்தான்

பொதுவாழ்வில் பெண்களின் சதவீதம் குறித்து வெளியிடப்பட்ட சர்வதேச புள்ளிவிவரப்படி பாகிஸ்தான் கடைசி இடத்திற்கு முந்தைய இடைத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்த…

பொதுவாழ்வில் பெண்களின் சதவீதம் குறித்து வெளியிடப்பட்ட சர்வதேச புள்ளிவிவரப்படி பாகிஸ்தான் கடைசி இடத்திற்கு முந்தைய இடைத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

உலகில் உள்ள நாடுகளில் பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை உலக பொருளாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டது.

மொத்தம் 146 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், ஐரோப்பிய நாடுகளான ஐலேண்டு, ஃபின்லேண்டு, நார்வே ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. நியூசிலாந்து 4வது இடத்திலும், ஸ்வீடன் 5வது இடத்திலும் உள்ளன.

ஜெர்மனி 10வது இடத்திலும், பிரான்ஸ் 15வது இடத்திலும், இங்கிலாந்து 22வது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா 27வது இடத்திலும், ஜப்பான் 116வது இடத்திலும், இந்தியா 135வது இடத்திலும் உள்ளன.

கடைசி இடமான 146வது இடத்தில் ஆப்கனிஸ்தான் உள்ளது. அதற்கு முந்தைய 145வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

பாகிஸ்தானில் பெண்களின் எண்ணிக்கை 10.70 கோடியாக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 70 லட்சமாக உள்ளது. எனினும், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களின் சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.