முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10ம்தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் இன்று ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகள் அனைவரும் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்குச் செல்கின்றனா்.

அதேபோல் போட்டிகள் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும்போதும் சென்னை விமான நிலையம் வழியாகவே செல்ல உள்ளனர். வீரர்கள் மட்டுமின்றி போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமான நிலையத்தில் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். செஸ் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையம் உள்நாடு, பன்னாட்டு முனையங்களில் செய்ய இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேற உரிய வசதிகள் ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. குடியுரிமை, சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளில் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

வீரர்கள், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறையினா், செங்கல்பட்டு மாவட்ட போலீசாா் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு வருபவா்களுக்கு எந்த விதமான இடையூறுகள், தடங்கலகள் ஏற்படாமல் அனைத்து வதசிகளையும் உடனுக்குடன் சென்னை விமான நிலையத்தில் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் செய்யப்பட்டுவரும் ஏற்பாடுகளை தமிழகச் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் ஒரு சில மாற்றங்களை செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். செஸ் ஒலிம்பியோட் போட்டியின்போது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் சிக்கல்களை எதிர்கொள்வதை தவிர்க்கவும் விரைவாக வெளியேறவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது விமான நிலைய இயக்குனர் சரத்குமார் மற்றும் செஸ் ஒலிம்பியாட் குழு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram