செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள்; அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட்…

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை  நடைபெறவுள்ளது. இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொது பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்துள்ளனர். போட்டிக்கு இதுவரை மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்துள்ளனர். உலகிலேயே முதன் முறையாக அதிக நாடுகள் பதிவு செய்துள்ள நிலையில், உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க உள்ளது செஸ் ஒலிம்பியாட் போட்டி.

செஸ் போட்டிக்காக மதுரை வந்த ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனாட்சி அம்மன் கோவில், விளக்கு தூண், தெப்பக்குளம், அண்ணா நகர் வழியாக ஒலிம்பியாட் ஜோதி மாவட்ட விளையாட்டு மைதானம் வந்தடைந்துள்ளது.

4வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவிருக்கும் மாமல்லபுரம் விளையாட்டு அரங்கு, வாகன நிறுத்தம், மின்விளக்கு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் பணிகள் முடிவடைந்த நிலையில் அந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு இரவு நேர ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.