தி லெஜண்ட் படத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணா நடித்துள்ள தி லெஜண்ட் படம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 28ம் தேதி…

சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணா நடித்துள்ள தி லெஜண்ட் படம் வருகிற 28ம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 28ம் தேதி வெளியாகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான இவர் சினிமாவில் கால் பதித்துள்ள முதல் படம் ‘தி லெஜண்ட்’. ஜே.டி – ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மறைந்த விவேக், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

லெஜண்ட் சரவணாவே பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் மோசன் போஸ்டர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாக சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் சரவணன். படம் இந்த மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தை வருகின்ற 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஞ்ஞானியாக சரவணன் நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்தை தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த நிலையில் எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியிடுகிறது. சரவணனை சந்திந்த எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உலக அளவில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.