”நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்” – நடிகர் ரஞ்சித்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  இதையும் படியுங்கள் :…

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நடிகர் ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

இதையும் படியுங்கள் : சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை – விசாரணையை தொடங்கிய காவல்துறை!

2024-ம் வருடம் அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும்,  சென்னிமலை முருகன் கோயிலில் வழிபட்டு இந்த புத்தாண்டினை தொடங்கி உள்ளோம். 

ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான். நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள்.

நடிகர் விஜயகாந்த் காலமானத்திற்கு நடிகர் வடிவேலு ஒரு இரங்கல் அறிக்கை விட்டு இருக்க வேண்டும்”

இவ்வாறு நடிகர் ரஞ்சித் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.