விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவும் வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரித்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் பேசப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இப்படத்தைக் “கைதி” படம் போலவே பாடல்கள் ஏதும் இல்லாமல் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பாடல்கள் கதையின் போக்கை சிதைப்பதாகக் கருதியே இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை தனுது பாணியிலேயே எடுக்கவும் இதுவரை யாரும் பார்க்காத விஜயை இப்படத்தில் காட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.







