முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல்கள் அதிநவீன கேமராக்கள் உதவியுடன் கண்டறிந்து வழக்கு பதிவு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து என்ஐசி E- Challan போர்ட்டல் உதவியுடன் தானியங்கி E-Chalian முறையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நடைமுறையானது ஏப்ரல் 1, 2022 இல் தொடங்கப்பட்டு, இரண்டு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பயணிப்பது. இரண்டு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்வது, மூன்று நபர்கள் பயணம் செல்வது, மற்றும் சாலையில் தவறான பக்கத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை பதிவு செய்கிறது.

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள், கேமராவில் பலமுறை படம்பிடிக்கப்பட்டால், அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 14.12.2022 அன்று கூடுதல் காவல் ஆணையர். போக்குவரத்து அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 69 பேரில் 35 பேரி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜூலியஸ் கிறிஸ்டோபர் அவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 06 பேர் தங்களது அபராத தொகையை செலுத்தி மொத்தம் ரூ.4200 paytm மூலம் பெறப்பட்டது. மற்றவர்கள் விரைவில் அபராத தொகை செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் 11 சந்திப்புகளில் 15 ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறித்தும், போக்குவரத்து விதிமீறல்களை கடைப்பிடிப்பதன் மூலம் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், திருத்தி அமைக்கப்பட்ட அபராத தொகையை கருத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இனி வரும் காலங்களில் வாரம் தோறும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசியல் கட்சி தொடங்கும் பிரசாந்த் கிஷோர்?

EZHILARASAN D

தந்தை, தாய் ஆதரவின்றி தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளரும் சிறுவர்கள்

Web Editor

இந்தியாவில் 15 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

Halley Karthik