செய்திகள்

சென்னை அணியை 134 ரன்களுக்கு சுருட்டிய பஞ்சாப்

மும்பை அணிக்கு 135 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. 

சென்னை பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாஃப் டு பிளிசிஸ் களமிறங்கினர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ருதுராஜ் 12 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து வந்த மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும், உத்தப்பா 2 ரன்னிலும், ராயுடு 4 ரன்னிலும் வெளியேறினர்.

தனி நபராக பாஃப் டு பிளிசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். சென்னை அணி கேப்டன் தோனி அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் 12 ரன்னில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா, பிராவோ அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். அணியில் அதிகபட்சமாக பாஃப் டு பிளிசிஸ் 55 பந்துகளுக்கு 76 ரன்கள் விளாசியிருந்தார்.

Advertisement:
SHARE

Related posts

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றி 2 நாட்களில் முதல்வர் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

Halley karthi

கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!

Halley karthi

வேளாண் மசோதாக்களை எரித்து ‘ஹோலி’ கொண்டாடிய விவசாயிகள்!

Halley karthi