பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை அகற்ற கோர்ட் உத்தரவு

பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைப்பதாக குற்றஞ்சாட்டிய நீதிபதி, சமுதாயத்திற்காக தியாகம் செய்த தலைவர்களை எந்தவொரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்த கூடாது என தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சிலைகளை 3 மாதங்களில்  அகற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் உரிமைகளை பாதிக்காத வகையில், சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.