ஆயுத பூஜை சிறப்பு பேருந்து; போக்குவரத்துத்துறை அறிவிப்பு

ஆயுத பூஜையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் 3 இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஆயுத பூஜையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக வரும்…

ஆயுத பூஜையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் 3 இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக வரும் 12 மற்றும் 13ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்காக தாம்பரத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் பூந்தமல்லியில் இருந்து வேலூர், ஓசூர், திருத்தணி, திருப்பதி மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், முகக்கவசம் அணிந்து பயணிக்குமாறும் பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.