ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்; ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் நடைபெற்ற…

ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. 

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் பாப் டு பிளிசிஸ் களமிறங்கினர். இதில், பாப் டு பிளிசிஸ் 25 ரன்னில் வெளியேறினார். இவரையடுத்து வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால், தொடக்க வீரராக இறங்கிய ருதுராஜ் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாளா புறமும் சிதறவிட்டார். ரெய்னாவை அடுத்து வந்த மொயின் அலி 21 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 2 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து வந்த ஜடேஜாவுடன் இணைந்த ருதுராஜ் மைதானத்தில் வான வேடிக்கை காட்டினார். ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸ்க்குமாக பறக்கவிட்டார். மறுபுறம் ஜடேஜாவும் தன் பங்கிற்கு ரன்களை குவித்து வந்தார். ஆட்டத்தின் இறுதி பாலில் ருதுராஜ் சிக்ஸர் விலாசி ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.