ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி!

சென்னை பள்ளிக்கரணையில் சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.  சென்னை பள்ளிக்கரணை தனியார் கல்லூரி வளாகத்தில் மனுஷியா பிளாசம் ஆயுஷ் ஹெல்த்கேர், சக்கரம் பவுண்டேஷன் மற்றும் தாகூர் கல்விக் குழுமம் இணைந்து உலக ஆட்டிசம்…

சென்னை பள்ளிக்கரணையில் சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

சென்னை பள்ளிக்கரணை தனியார் கல்லூரி வளாகத்தில் மனுஷியா பிளாசம் ஆயுஷ் ஹெல்த்கேர், சக்கரம் பவுண்டேஷன் மற்றும் தாகூர் கல்விக் குழுமம் இணைந்து உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையில், சிறப்பு குழந்தைகளுக்கான
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளுடன் கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடி வந்து முடித்தனர்.
பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.