மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாளான இன்று நான்கு மாசி வீதிகளில் வழியாக ஊர்வலமாக வரும் பிச்சாண்டி சுவாமி ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
பிச்சாண்டி சுவாமி பிச்சை பாத்திரம் ஏந்தி ஊர்வலமாக வலம் வருவார். நான்கு மாசி வீதிகளில் வழியாக ஊர்வலமாக வரும் பிச்சாண்டி சுவாமிக்கு பொதுமக்களும் பிச்சையளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் நண்பகல் 12 மணிக்கு சிவகங்கை ராஜா மண்டபப்படி,
மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தளினார். அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் நந்திகேஸ்வரர் – யாளி வாகனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி உலா வந்து இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது.








