சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா தோல்வி அடைந்த நிலையில், தொடக்கம் முதலே யுக்திகளை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக ஜெர்மனி வீராங்கனை நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. பிரதான போட்டிகளின் முதல் சுற்றுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்றைய முதல் சுற்று ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனையான குஜராத் மாநிலத்தை சேர்ந்த “அங்கிதா ரெய்னா”, நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி வரை சென்ற ஜெர்மனியை சேர்ந்த “மரியா தட்ஜானா” என்பவரிடம் 0-6, 1-6 என விளையாடி 2-0 நேர் செட் கணக்கில் படுதோல்வி அடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அங்கிதா ரெய்னாவை சொந்த மண்ணில் வீழ்த்திய ஜெர்மனியை சேர்ந்த “மரியா தட்ஜானா” செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, போட்டிக்கு வரும்போதே தன் யுக்திகளை பயன்படுத்தி, அங்கிதாவை தடுமாற செய்ய வேண்டும். அவர் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனை என்பது தனக்கு தெரிந்து தான் விளையாடியதாகவும் அவர் கூறினார். சென்னையில் தான் விளையாடும் போது தனக்கான ஆதரவு இல்லாவிட்டாலும், தன்னை ஒருநிலைப்படுத்தி விளையாடியதன் மூலம், போட்டியை 2-0 என கைப்பற்றி வெற்றி பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் பேசினார். தான் ஒட்டுமொத்த தொடருக்கான சிந்தனைகளை தவிர்த்து, அடுத்தடுத்து சந்திக்கும் போட்டிகளுக்காக தன்னை ஆயத்தப்படுதிக் கொள்வதாகவும், அதற்கேற்றாற்போல் திட்டங்கள் வகுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தனது கணவர் தனக்கு மிகுந்த ஆதரவு அளிப்பதாகவும், குழந்தைகளை புளோரிடாவில், இணைய வழி கல்வி மூலம் பயில வைப்பதால், தனக்கு விளையாடுவதற்கான முழு சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும் மரியா தட்ஜானா கூறினார்.