முக்கியச் செய்திகள் விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ்; இந்திய வீராங்கனை 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை தண்டி கர்மன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் SDAT
மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த டென்னிஸ்
வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் WTA 250 புள்ளிகளுக்கான பிரதான
போட்டிகள் இன்று முதல் துவங்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று தொடங்கிய பிரதான சுற்றுகளில், ஒற்றையர் மகளிர் பிரிவுக்கான ஆட்டத்தில்,
வயல் கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை தண்டி கர்மன் பிரான்ஸ்
வீராங்கனையான ச்ளோ பாக்குவெட் உடன் விளையாடினார்.

முதல் செட்டை 4-6 என கைவிட்டாலும், இரண்டு மற்றும் மூன்றாவது செட்களை 6-4, 6-3
என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி 2-1 என போட்டியை வென்றார். இதன் மூலம் அவர்
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அதே போல கனடாவை சேர்ந்த யூஜினி புச்சார்ட் முதல் சுற்றை 2-0 என கைப்பற்றி
வென்றார். ஸ்விட்சர்லாந்து வீராங்கனை ஜோனே ஜுகர் உடன் மோதிய யூஜினி, 7-6, 6-2
என வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில், செஸ் குடியரசை சேர்ந்த லிண்டா பிருவிர்ட்டோவா, ஜப்பானை சேர்ந்த நாவோ ஹிபினோ, போலந்தை சேர்ந்த கடர்சினா காவா, கனடாவை சேர்ந்த ரெபேக்கா மரினோ உள்ளிட்டோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழிசை, கமல்ஹாசன் பக்ரீத் வாழ்த்து

Gayathri Venkatesan

டாஸ்மாக் வருவாய் எவ்வளவு தெரியுமா?

EZHILARASAN D

விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு: ஒருவர் பலி; 7 பேர் கைது

EZHILARASAN D