சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் -முக்கிய குற்றவாளிக்கு காவல்துறை வலைவீச்சு!

ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சாலையோர காய்கறி கடை நடத்தி வருபவர் மணி. இவரது கடைக்கு நேற்று…

ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சாலையோர காய்கறி கடை நடத்தி வருபவர் மணி. இவரது கடைக்கு நேற்று வந்த 2 பேர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் சுப்பிரமணியன் என்பதும், பள்ளிக்கரணையை சேர்ந்த 64 வயது முதியவர் அண்ணாமலை என்பதும் தெரிய வந்தது. இதில் சுப்பிரமணியன் வழக்கறிஞர் என்பதும், அண்ணாமலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களிடமிருந்து ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள், கட்டிங் மிஷின், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களுக்கு கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட வைத்தது குமார் என்பதும், அவரை நுங்கம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.