சென்னையில் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
மதுரை, கோவை நடைபெற்ற கல்வி கண்காட்சியின் வெற்றியை தொடர்ந்து தலைநகர் சென்னையில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சியை நடத்தியது. அந்த வகையில் இந்தாண்டு சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சி தொடங்கியது. இந்த கல்வி கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் 20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சார்ந்த அரங்குகள் இடம்பெற்றன. முதல் நாளான நேற்று சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆர்வத்துடன் மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வருகை தந்து பார்வையிட்டு பயன்பெற்றனர்.
இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியிலும், ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டு உயர்கல்வி படிப்புகள் குறித்து ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் “ நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள இந்த கல்வி கண்காட்சி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், உயர்கல்வி குறித்து தங்களிடம் இருக்கும் பயத்தையும், குழப்பத்தையும் போக்கி, புதிய உத்வேகத்தையும், தெளிவையும் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் நியூஸ் 7 தமிழுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். கடைசி நாளான இன்று விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா, பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று பயன் பெற்றனர்.







