சேலத்தில் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி வெற்றிகரகமாக நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றொர்கள் பங்கேற்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ், கல்வி கண்காட்சியை நடத்தியது.
இந்த ஆண்டு சேலம் மூவேந்தர் அரங்கத்தில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்ற கல்வி கண்காட்சியில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ” மருத்துவம், பொறியியல் கல்விகளை தாண்டி கல்விக் கண்காட்சியில் வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புகள் என்னென்ன உள்ளது போன்றவை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் என்ன திறமை உள்ளதோ, அதனை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். +2 படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்பு உள்ளது. சரியான நேரத்தில் நியூஸ் 7 தமிழ் இந்த கல்வி கண்காட்சியை நடத்தி உள்ளது.” என தெரிவித்தார்.
+ 2 படித்தால் காவலர் ஆகலாம், பட்டம் படித்தால் எஸ்.ஐ ஆகலாம், டி.எஸ்.பி ஆகலாம், இந்திய அளவில் ஐ.பி.எஸ்.ஆகலாம். இந்த தேர்வுக்கு எல்லாம் போட்டி தேர்வு, உடல் தகுதி, பொது அறிவு ஆகியவை அவசியம். காவல்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகின்றன.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நெருக்கடி இல்லாத சமயத்தில் அனைவரும் கல்வி கண்காட்சியை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளீர்கள். மாணவர்கள் அவர்களுக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுத்து பயன் படுத்த வேண்டும் என எஸ்பி சிவக்குமார் தெரிவித்தார்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சியில் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.







