கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் சீண்டலில் ஈடுபட வாய்பில்லை என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள மாநகர காவல் ஆணையரகத்திற்கு சென்ற நடிகை அபிராமி வெங்கடாசலம், கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக செயல்பட தன்னை பேராசிரியர்கள் நிர்பந்திப்பதாக கூறி புகார் மனு அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கலாஷேத்ரா கல்லூரிக்கு எதிராக செயல்பட தன்னை பேராசிரியர்கள் வற்புறுத்தினார்கள், அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன், அது தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
நான் 2015-19 வரை பயின்ற காலத்தில் பாலியல் சீண்டல்கள் எதுவும் நடைபெற்றதில்லை. இதுகுறித்து நான் விளம்பரத்திற்காக பேசி வருவதாக பலர் கூறி வருகின்றனர்,அதில்
உண்மையில்லை.கல்லூரியில் பணிபுரியும் நிர்மலா என்ற பேராசிரியர் எனது தோழி மூலமாக என்னை தொடர்பு கொண்டு கல்லூரிக்கு எதிராக செயல்படுவது குறித்து என்னிடம் ஆலோசனை கூறினார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன், மேலும் நிம்மி என்ற ஆசிரியரும் என்னை தொடர்பு கொண்டார்.லிலா என்ற பேராசிரியர் கல்லூரிக்கு எதிராக செயல்பட மாணவிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.
கல்லூரி நிர்வாகவத்தை கைப்பற்றுவதற்காக பேராசிரியர்கள் நந்தினி,நிர்மலாராஜன் ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் தான் படித்த காலங்களில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டத்தில்லை,தற்போது அதுபோன்று பாலியல் சீண்டல் ஏற்படுவதாக மாணவிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
—வேந்தன்
Visual Id : PL







