விமரிசையாக நடைபெற்ற தொட்டியம் தூக்குத்தேர் திருவிழா!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்று முசிறியை அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான…

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்று முசிறியை அடுத்த தொட்டியத்தில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த மாதம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தினசரி அம்மனுக்கு பூச்செறிதல், புனித நீர் எடுத்து வருதல், ஆயிரம் பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.

தேரில் கலசம் மற்றும் தலை அலங்காரம் நடத்தப்பட்டு பின்னர் இரண்டு திருத்தேர்களும் அலங்கரிக்கப்பட்டது. ஒரு தேரில் ஓலை பிடாரியம்மனும் மற்றொரு தேரில் மதுரை காளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

அப்போது விவசாயம் செழிக்க வேண்டி, உலக மக்கள் நன்மைக்காகவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மிகப்பெரிய இரண்டு திருத்தேர்களையும் பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டும், கைகளில் இழுத்துக்கொண்டும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

சிறப்புமிக்க தேர் ஊர்வலம் வந்தபோது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.