வடகிழக்கு பவருமழை காலத்தில் பெய்த கனமழைக்கு பின் சென்னை 98% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமடையை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் 200 சிறப்பு மருத்துவ
முகாம் நடைபெற்று வருகிறது. பட்டாளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவர்
முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மேயர் பிரியா, திரு.வி.க
நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழைக்கு பின் சென்னை மாநகரம் 98 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இன்று மதியத்திற்குள் 100% இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். 9 ம் தேதி கனமழை இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.
பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் எதுவும் ஏற்பட்டால் அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு பிறகு சாலைகளில் உள்ள சிறிய, சிறிய பள்ளங்கள் சரி செய்து சாலைகள் போடப்படும். மழைக் காலங்களில் வட சென்னை மக்கள் ரப்பர் படகுகளில் செல்லும் நிலை தற்போது மாறியுள்ளது. வருங்காலத்தில் மழைநீரே தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இடிந்த கட்டிடங்கள் பழமையான கட்டிடம் கட்டிடத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது மாநகராட்சியும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் பழமையான கட்டிடத்தில் இருப்பவர்களை கண்டறிந்து மாற்று இடத்தில் தங்க வைக்க வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி மாற்று இடத்திற்கு தங்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனாலும் வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.







