ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் – சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர் ஆஷிஷ்குமார்செனிடம்…

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி சிறப்பு குழு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர் ஆஷிஷ்குமார்செனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயினை துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் சச்சின் குமார் ஜெயின் ஆராய்ச்சி படிப்பை 5 வருடம் படித்து முடித்த நிலையிலும் வேண்டுமென்றே 3 வருடம் கூடுதலாக முடிக்கவிடாமல் செய்தது தெரிய வந்துள்ளது.  அதனை தொடர்ந்து, சகோதரியாக பழகிய பெண்ணை தவறாக தொடர்புபடுத்தி சச்சின் குமார் ஜெயினை அவதூறு செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – புயலாக மாற வாய்ப்பு!

எல்லோரிடமும் பிரபலமான சச்சின் குமார் ஜெயினை வேண்டுமென்றே மட்டம் தட்டியது மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் 8 வருடம் கழித்து ஆராய்ச்சி முடித்து விட்டு சமர்ப்பித்த அறிக்கையை ஜூனியர் மாணவர்கள் கொண்டு திருத்த வைத்து தகுதி இல்லை என அவமானப்படுத்தியது தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சி மாணவனாக சேர வேண்டும் என்று ஆசையுடன் வந்து சேர்ந்த சச்சின் குமார் ஜெயினை, பல்வேறு விதமாக துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.