தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாக கூறி வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும் 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் மனுதாரரான செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.







