லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன், …

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.

இந்த நிலையில் லியோ படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டியோ நிறுவனத்தின் இயக்குநர் லலித்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.  அப்போது அவர் மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளதால்,  திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும்,  திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.