லியோ திரைப்படம் தெலுங்கில் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.
லியோ திரைப்படத்தின் ஆடியோ – இசை வெளியீட்டு விழா தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவதை வரை பெரும் சிக்கல்கள். லியோ இவ்வெளியீட்டு விழா சமயத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அசம்பாவித புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது.
அத்துடன் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், D Studio என்ற நிறுவனம் லியோ என்ற தலைப்பு தங்களிடம் உள்ளது என்றும், எனவே லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் 20ம் தேதி வரை லியோ படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது.
‘இந்த நிலையில் லியோ தயாரிப்பு நிறுவனம் டி ஸ்டூடியோவிடம் பேசி சுமூக தீர்விற்கு வந்துவிட்டதாகவும், தலைப்பிற்காக சுமார் 25 லட்சம் கொடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டி ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுடைய வழக்கை இன்று வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லியோ திரைப்படம் தெலுங்கில் திட்டமிட்ட தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







