முக்கியச் செய்திகள் தமிழகம்

மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனையர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் “கிரடாய்” என்ற அமைப்பின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “காய்கறி மற்றும் மளிகை பொருட்களுக்கான விலை தினசரி நிர்ணயம் செய்து, மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. காய்கறி, மளிகை பொருட்களை மாநகராட்சி நிர்ணைத்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து செய்யப்படும்.

மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேசுகையில், சென்னையில் வீடு தேடி மளிகை பொருட்களை விற்பனை செய்ய விண்ணப்பித்த 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோரில் 3 ஆயிரத்து 600 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement:

Related posts

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!

Gayathri Venkatesan

தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Ezhilarasan

நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Karthick