திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் குன்றுமேல் அய்யன் சாஸ்தா திருக்கோவில் திருவிழா முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணற்றில் அமைந்துள்ளது குன்றுமேல் அய்யன் சாஸ்தா திருக்கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 5 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பல ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கலிட்டும், நேர்த்திக்கடன் செலுத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவிழாவின்போது மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அப்படியே ஆங்காங்கே விட்டு சென்றுவிட்டனர். இதனை திருவிழா முடிந்து 15 நாட்கள் ஆகியும் அகற்றாமல் நிர்வாகம் சார்பில் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.இதனால் கோவில் வளாகம் முழுவதும் குப்பைகளால் நிரம்பி வழிவதுடன் தூர்நாற்றம் வீசி வருகிறது.
—-வேந்தன்







