அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கிக்கு சொந்தமான நகைகடன் பிரிவு அலுவலகத்தில் இருந்து நேற்று 15 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வங்கி ஊழியர் முருகன், அவரது கூட்டாளிகள் தற்போது கைதாகி உள்ள பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் மற்றும் தலைமறைவாக உள்ள சூர்யா மேலும் ஒருவர் என காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
கொள்ளை வழக்கில் இதுவரை பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 14 கிலோ இன்னும் மீட்கப்பட்டவில்லை. தலைமறைவாக முருகனை பிடிக்க சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை சுற்றியுள்ள 20 சோதனை சாவடிகள் போலீசார் உஷார்படுத்தப்படுத்தி தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.








