முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதிதான 759 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிலும், தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தொற்று பரவல் வேகம் அதிகரித்ததையடுத்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழகத்தில் இன்று புதிதாக 456 ஆண்கள், 303 பெண்கள் என மொத்தம் 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேர், கோவையில் 92 பேர், செங்கல்பட்டில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 57 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 102 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 382 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 7 ஆயிரத்து 406 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 813 பேரும், கோவையில் 695 பேரும், செங்கல்பட்டில் 505 பேரும், சிகிச்சையில் இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவல்துறை விசாரணையில் விஜய நகர பேரரசு சிலைகள் கண்டுபிடிப்பா ?

Web Editor

விஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

EZHILARASAN D

தீயில் சிக்கிய சிறுத்தைக் குட்டிகளை மீட்ட வனத்துறையினர்

G SaravanaKumar