சென்னை : முதலமைச்சர் வாகனம் முன்பு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்றவர் கைது

சென்னையில் முதலமைச்சர் வாகனம் வரும்போது குடிபோதையில் குறுக்கே விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் நேற்றிரவு…

சென்னையில் முதலமைச்சர் வாகனம் வரும்போது குடிபோதையில் குறுக்கே விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, ராயப்பேட்டையைச் சேர்ந்த சுஜன் (வயது 20) என்பவர் மதுபோதையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

முதலமைச்சர் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே சென்று கொண்டிருந்தபோது, சுஜன் தனது இருசக்கர வாகனத்தை விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றுள்ளார். இதையடுத்து, முதலமைச்சர் வாகனம் குறுக்கே இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றதால், சுஜனை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 336 மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், IPc 353- அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், IPc294( பி) ஆபாசமாக பேசுதல், ipc 506(2) கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சுஜன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.