முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வரும் 28ம் தேதி திறப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா சாலையில் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ளது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா சாலையில் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ளது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி ஒமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வெங்கையா நாயுடுவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்திருந்தார். அப்போதே விழாவிற்கான அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி சிலை, பீடம் உள்ளிட்ட பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வருகிறது. கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமாக 16 அடியில் வெண்கல சிலையாக இது அமையவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.