முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி

நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் அதிகமானோருக்கு செலுத்தியதில், சென்னை முதலிடத்தில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் என ஐந்து பெருநகரங்களில் எந்த நகரில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

சென்னையில் 11 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை செலுத்திவுள்ளனர் அதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 10 சதவீதமும் டெல்லி மும்பை ஆகிய நகரங்களில் தலா 7 சதவீதமும் ஹைதராபாத்தில் 5 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும் சென்னையில் 43 சதவீதமும் அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் 37 சதவீதமும் 33 சதவீதம் மும்பையில் 32 சதவீதமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரில் மொத்த மக்கள் தொகையில் 45 வயது மேற்பட்டோரில் 91 சதவீத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 85 சதவீதமும் மும்பையில் 70 சதவீதமும் டெல்லியில் 59 சதவீதமும் ஹைதராபாத்தில் 48 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா-தென்ஆப்பிரிக்கா டி20 போட்டி; இந்தியா பந்துவீச்சு தேர்வு

G SaravanaKumar

இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

Halley Karthik

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா!

Halley Karthik