பரனூர் சங்கச்சாவடியில் பாஜகவினர் கார்களை மட்டும் இலவசமாக அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல் காந்தியை இடை நீக்கம் செய்தது கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு செல்ல காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி என்பவரின் கார் மற்றும் உடன் வந்தவர்களின் வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்றது. அப்போது அவர்களை மடக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக்கட்டணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு, அங்கிருந்து புறப்பட்ட காங்கிரஸ்காரர்கள் செங்கல்பட்டு பழைய பேருந்து
நிலையத்தில் ராகுல் காந்தி இடை நீக்கம் கண்டித்து மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்துள்ள நரேந்திர மோடியை திரும்ப செல்ல வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பியவாறு 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முற்றுகையிட்ட கையோடு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு
சென்று சுங்கச்சாவடி ஊழியர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இனி இது போல் தவறு நடக்காது என சுங்கச்சாவடி நிர்வாகம் உறுதி அளித்தது தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுங்கச்சாவடியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
—-ஶ்ரீ மரகதம்







