முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – சென்னை மாநகரில் சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பு

சென்னை மாநகரில் 10 ஆண்டுகள் பழமையான 68 இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பை காவல் துறை வெளியிட்டுள்ளது.

இதில், 4.76 கோடி மதிப்பீட்டில் 10 ஆண்டுகள் பழமையான 68 போக்குவரத்து சிக்னல்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. சென்னையில் சேதமடைந்து பயனற்று கிடந்த போக்குவரத்து சிக்னல்கள் தொடர்பாக கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மாநகரில் முக்கிய பிரதான பகுதிகளாக இருக்கும் ராயப்பேட்டை, தி.நகர், ஜி.என் செட்டி சாலை, மேற்கு மாம்பழம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்து கிடந்த போக்குவரத்து சிக்னல்கள் தொடர்பாக விபத்து ஏற்படும் அபாயம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது நியூஸ் 7 தமிழ்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி, சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்து மரணங்கள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி போக்குவரத்து சிக்னல்கள் சேதம் அடைந்து கிடக்கும் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகரில் 10 ஆண்டுகள் பழமையான 68 இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பை காவல் துறை வெளியிட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்

Halley Karthik

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

Jayapriya

கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

EZHILARASAN D