முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியாக கற்பனையாக பரப்பப்பட்ட செய்தியாகும் என்று ஓசூரில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் பேரண்டப்பள்ளி, அத்தி முகம், படிக்கல் கோட்டை உளிமங்கலம், தளி, வி.மாதேப்பள்ளி ஆகிய பகுதிகளில் ரூபாய் 1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் செவிலியர் குடியிருப்புக் கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக மக்கள் நல்வாழ்த்துத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்பது போலியாக கற்பனையாக பரப்பப்பட்டு வரும் செய்தியாக உள்ளது. பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நேரடியாக நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அங்கு இதுபோன்று மருந்துகள் தட்டுப்பாடு எதுவும் இல்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக எம்.பி முகமது ஜான் மரணம்!

எல்.ரேணுகாதேவி

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்

EZHILARASAN D

பிரதமருக்கு முதலமைச்சர் அளித்த “தொல்காப்பியம்”

EZHILARASAN D