பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – அரையிறுதியில் ஜோகோவிச், அல்கரஸ் மோதல்!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸை, நட்சத்திர வீரர் ஜோகோவிச் எதிர்கொள்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸை, நட்சத்திர வீரர் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் நட்சத்திரமான கார்லோஸ் அல்கரஸ், கிரீஸ் நாட்டின் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

அதிரடியாக விளையாடிய அல்கரஸ், முதல் மூன்று செட்களையும் 6-2, 6-1, 7-6(7-5) என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜோகோவிச்சை அல்கரஸ் சந்திக்க உள்ளார்.

முன்னதாக காலிறுதிச் சுற்றில் நோவக் ஜோகோவிச்,  ரஷிய வீரர் கரன் ஹெச்நவ்வை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படியுங்கள் : பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

கடந்த ஆண்டு, ஸ்பெயின் நட்சத்திரமான ரபேல் நடாலுடன் காலிறுதியில் மோதிய ஜோகோவிச் போராடி தோல்வியை சந்தித்தார். எனவே இந்த முறை மற்றொரு ஸ்பெயின் நட்சத்திரத்தை வீழ்த்தி, தனது 3வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது நடால் மற்றும் ஜோகோவிச் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.