முக்கியச் செய்திகள் மழை

கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமுதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமுதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்

EZHILARASAN D

ஜவுளித்துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல முயன்ற 12 பேர் கைது

G SaravanaKumar