6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ புயல் தெற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் வலுகுறைந்த புயலாக அதே பகுதியில் நிலவியது. இது குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து மேற்கு-தென் மேற்கில் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும். இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.